செய்திகள்

ஆசிய கோப்பை இறுதிப் போட்டி- லிட்டோன் தாஸ் அதிரடியால் வங்காள தேசம் 24 ஓவரில் 128-2

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்காள தேசம் 24 ஓவரில் 2 விக்கெட்டு இழப்பிற்கு 128 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. #AsiaCup2018

‘சூப்பர் 4’ சுற்றில் வங்காள தேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஐந்து மாற்றங்களை செய்தது. ரோகித் சர்மா, மணிஷ் பாண்டே, சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, சித்தார்த் கவுல், கலீல் அகமது, தீபக் சாஹர் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர்.

இதில் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கிய அரைசதம் அடித்தார். பரபரப்பான ஆட்டத்தில் போட்டி ‘டை’ ஆனது. இன்று நடைபெற்றும் வரும் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ஐந்து பேரும் நீக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கிய ஐந்து பேரும் சேர்க்கப்பட்டனர்.

வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.

வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. லிட்டோன் தாஸ் 12-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் கொடுத்த கேட்சை சாஹல் பிடிக்க தவறினார்.

17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.

SCROLL FOR NEXT