செய்திகள்

ரஞ்சி டிராபிக்கான தமிழ்நாடு அணியில் அஸ்வின், முரளி விஜய்: அபிநவ் முகுந்த் கேப்டன்

ரஞ்சி டிராபி தொடருக்கான தமிழ்நாடு அணியில் அஸ்வின், முரளி விஜய் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 அணியில் விளையாட இருப்பதால் கேப்டன் பதவி கிடைக்கவில்லை. அபிநவ் முகுந்திற்கும், ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் அபிநவ் முகுந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்து விஜய் சங்கருக்கு 15 பேர் கொண்ட அணியிலும் இடம் கிடைக்கவில்லை.


விஜய் சங்கர்

மேலும், டி20 அணியில் இடம் கிடைக்காத அஸ்வின், காயத்தில் இருந்து மீண்டுள்ள முரளி விஜய் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு அணி வலுவானதாக இருக்கும் என எதிர்பா்ரக்கப்படுகிறது.

தமிழ்நாடு அணியில் இடம்பிடித்துள்ள 15 பேர் கொண்ட வீரர்கள் விவரம்:-