அவுட்டாகிய விரக்தியில் ஜோ ரூட் 
செய்திகள்

ஆஷஸ் சிட்னி டெஸ்ட்: முதல் நாளில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்ப்பு

சிட்னியில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்துள்ளது. #Ashes #AUSVENG

இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியது. மழைக்காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு மேசன் கிரேன் சேர்க்கப்பட்டார்.

இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெல்போர்ன் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த அலஸ்டைர் குக் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஸ்டோன்மேன் 24 ரன்னிலும், அடுத்து வந்த வின்ஸ் 25 ரன்னிலும் வெளியேறினார்கள்.


பேர்ஸ்டோவ்-ஐ அவுட்டாக்கிய சந்தோசத்தில் ஹசில்வுட்

4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் தாவித் மலன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்தார்கள்.

முதல் நாள் ஆட்டம் முடிவடைய சிறிது நேரம் மட்டும் இருந்த நிலையில் ஆஸ்திரேலியா 80 ஓவர்கள் முடிந்த நிலையில் புது பந்தை எடுத்தது. 81-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய ஜோ ரூட், 3-வது பந்தில் ஆட்டம் இழந்தார். ஜோ ரூட் 83 ரன்கள் எடுத்த நிலையில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.


ஜோ ரூட் பந்தை விரட்டும் காட்சி

அடுத்து பேர்ஸ்டோவ் களம் இறங்கினார். 82-வது ஓவரை ஹசில்வுட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய பேர்ஸ்டோவ், 4-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் ஆட்டம் இழந்தார்.


அரைசதம் அடித்த தாவித் மலன்

SCROLL FOR NEXT