ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து டி20 தொடர் 
செய்திகள்

2-வது டி20 போட்டியிலும் அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் அயர்லாந்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்.

மாலை மலர்

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கிரேட்டர் நொய்டாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. கேப்டன் அஸ்கர் ஆஃப்கன் 28 பந்தில் 49 ரன்களும், குர்பாஸ் 35 ரன்களும் விளாசினர்.

பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. கேப்டன் பால்பிரைன் 35 பந்தில் 46 ரன்களும், டேக்டர் 29 பந்தில் 37 ரன்களும் அடித்தனர். என்றாலும் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களே அடித்தது. இதனால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை நாளைமறுநாள் (10-ந்தேதி) நடக்கிறது.