யானைகள் 
செய்திகள்

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் உலா வரும் யானைகள்

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் குட்டியுடன் உலா வருகின்றன.

மாலை மலர்

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த அடர்ந்த வனப்பகுதியில் திண்டுகல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். ஆசனூர் வனப்பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். தற்போது வனப்பகுதியில் நல்ல மழை பெய்து பசுமையாக இருக்கிறது.

இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரபள்ளம் அருகே தேசியநெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 2 குட்டிகளுடன் 5 யானைகள் சாலையில் உலா வந்ததன. சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக உலா வந்த யானைகள் தானாக வனப்பகுதியில் சென்றன.

இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என்றும், யானைகளின் அருகே சென்று செல்போனில் புகைப்படம் எடுக்கவோ, வாகனத்தை நிறுத்தவோ கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.