செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் 186 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஆசாத் ஷபிக்

இங்கிலாந்து தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் ஆசாத் ஷபிக் 186 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று முத்திரை படைத்தார். #ENGvPAK

மாலை மலர்

முதலில் பேட்டிங் செய்த நார்தம்ப்டன்ஷைர் 259 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் அசார் அலி (9), இமாம்-உல்-ஹக் (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல், ஆசாத் ஷபிக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹரிஸ் சோஹைல் 79 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.


ஹரிஸ் சோஹைல்

ஆனால் ஆசாத் ஷபிக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அத்துடன் நிலையாக நின்று விளையாடினார். அவருக்குத் துணையாக விளையாடிய பாபர் ஆசம் 57 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 428 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆசாத் ஷபிக் 186 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.