துப்பாக்கிச்சூடு 
செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதல்- போலீஸ் துப்பாக்கிச் சூடு

அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் இரு தரப்பு மோதிக் கொண்டதால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் இரு தரப்பு மோதிக் கொண்டதால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு திரும்பியவர்கள் மீது ஒரு தரப்பினர் தாக்குதல் மற்றும் கல்வீசினர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழலால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இருதரப்பு மோதலால் நிலவும் பதற்றம் காரணமாக அதிரடிப்படை வஜ்ரா வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. 

போதிய போலீசார் இல்லாததால் மோதலை தவிர்க்க வானத்தை நோக்கி இருமுறை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.