செய்திகள்

பொருளாதாரத்தை சீர்குலைத்ததாக குற்றச்சாட்டு: யஷ்வந்த் சின்ஹாவுக்கு அருண் ஜெட்லி பதிலடி

பிரதமர் மோடியும், அருண் ஜெட்லியும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டதாக முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியதற்கு அருண் ஜெட்லி நேற்று பதில் அளித்தார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பிரதமர் மோடியும், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டதாக பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டி இருந்தார். அதற்கு அருண் ஜெட்லி நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

யஷ்வந்த் சின்ஹாவுக்கு முன்னாள் மத்திய நிதி மந்திரியாக இருப்பது சவுகரியமாக இல்லை போலும். இப்படி குற்றச்சாட்டு சொல்வதன் மூலம், அவர் 80 வயதில் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார். அவர் நிதி மந்திரியாக இருந்தபோது 15 சதவீத வாராக்கடன் இருந்தது உள்ளிட்ட ‘சாதனைகளை’ மறந்து விட்டார். கொள்கைகளை விட்டுவிட்டு மனிதர்களை விமர்சிக்க தொடங்கி விட்டார்.

யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன் கைகோர்த்து செயல்படுகிறார். ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டதை இருவருமே மறந்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.