செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அருண் ஜெட்லி அனுமதி

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மத்திய மந்திரி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லிக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்போவதாக அருண் ஜெட்லி பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், அவர் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. #TamilNews

SCROLL FOR NEXT