செய்திகள்

வருகிற 29-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. #Jayalalithaa #ApolloHospital

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஆணையத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தில் பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடமும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. ஜூலை 29ல் இரவு 7 மணி முதல் 45 நிமிடங்கள் நடைபெறும் இந்த விசாரணையின் போது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை, சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்கிறது.

SCROLL FOR NEXT