சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது நேரு பூங்கா-கோயம்பேடு-பரங்கிமலை வரையிலும், சின்னமலை-விமான நிலையம் இடையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.
பயணம் சொகுசாகவும், வேகமாகவும் அமைந்தாலும் கட்டணம் அதிகமாக இருப்பதால் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை.
பயணிகளை கவர விழாக்காலங்களில் தள்ளுபடி சலுகையும் அறிவிக்கப்பட்டது.
இப்போது கலைநிகழ்ச்சிகள் நடத்தி பயணிகளை கவரவும், ரெயில் பயணம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி நாளை (26-ந் தேதி) வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் மாலை 6 மணிக்கு காஷ்யாப் மகேஷ் குழுவினரின் பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை மறுநாள் (27-ந் தேதி) ஆலந்தூர் ரெயில் நிலையத்தில் சிம்கோ பூதியப்பா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
28-ந்தேதி திருமங்கலம் ரெயில் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு இரு குழுவினரும் இணைந்து நடத்தும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. #tamilnews