இதனால் மொனாகோ அணியில் உள்ள வீரர்களை வாங்குவதற்கு மற்ற அணிகள் முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் விளையாடும் அர்சனல், மொனாகோ அணியின் தாமஸ் லெமரை வாங்க விரும்புகிறது. இதற்கான டிரான்ஸ்பர் பீஸ்-ஆக 45 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருக்கிறது.
அர்சனல் கடந்த வாரம் லயன் அணியில் இருந்த அலெக்ஸாண்டர் லெய்செட்டை 52.7 மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்கியுள்ளது. தற்போது தாமஸை 45 மில்லியன் கொடுத்து வாங்க இருக்கிறது.