ஆட்டம் தொடங்கியது முதலே அர்செனல் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் மெசுட் ஒசில் இடது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து அடித்து பந்தை, முஸ்டாஃபி தலையால் முட்டி கோல் அடித்தார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அர்செனல் மேலும் ஒரு கோல் அடித்தது. அலெக்சான்ட்ரே லகாசெட்டே கொடுத்த பந்தை அலெக்சிஸ் சான்செஸ் கோலாக மாற்றினார்.