நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சேம் சுதர்சன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (வயது 40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று சாந்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 40). அங்கு சென்று சாந்தியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுக்கவே சாந்தியிடம் ஆனந்த் தகராறில் ஈடுபட்டார்.
உடனே சாந்தி கூச்சலிட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். இதையடுத்து ஆனந்த், கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்திரமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து ஆனந்த் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஆனந்துக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மேலும் அவர், ஆரல்வாய்மொழி பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.