திருபுவனை:
திருபுவனையை அடுத்த கலிதீர்த்தாள் குப்பம் தொட்டி தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சுப்பு என்ற சுகுமாறன் (வயது 27). இவர் மீது தமிழ்நாடு மற்றும் புதுவையில் கொலை- கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்- இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவிடம் பரிந்துரைத்தனர்.
அதன் பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி திருபுவனை போலீசார் சுகுமாறனை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.