கைது 
செய்திகள்

பெண் தற்கொலை: கணவன்-மாமியார் கைது

போச்சம்பள்ளி அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன்-மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் இந்திராநகர் காலனியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி சிந்தாமணி (வயது26).  இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி அன்று சிந்தாமணி வீட்டில் மண்எண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார்.  

இதனால் சிந்தாமணியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இரவு சிந்தாமணி உயிரிழந்தார்.

இது குறித்து பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் விசாரணை மேற்கொண்டார். அப்போது கணவர் ஜெயராஜ் மற்றும் அவரது தயார் ஜெயா ஆகிய இருவரும் சிந்தாமணியை தற்கொலை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைதான ஜெயராஜ் தர்மபுரி சிறையிலும், ஜெயாவை சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். மேலும் இது குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. விசாரித்து வருகின்றனர்.