செய்திகள்

கம்பம் அருகே கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கம்பம் அருகே கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

தேனி:

கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் கம்பம் நாக கன்னியம்மன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது கோம்பை ரோடு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (வயது 47) என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

பாண்டியன் தொடர்ந்து இதே குற்றத்தை செய்து வந்ததாலும் பல்வேறு வழக்குகள் இருப்பதாலும் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் அடைக்க மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். கலெக்டர் உத்தரவின் பேரில் பாண்டியன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். #tamilnews

SCROLL FOR NEXT