செய்திகள்

ஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகளுடனான என்கவுண்டரில் ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற என்கவுண்டரில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். #KupwaraEncounter

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் கச்சூ கிராமத்தில் இன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ராம் பாபு சஹாய் என்ற ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதை அறியும் வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #KupwaraEncounter