செய்திகள்

வேலூர் அருகே விவசாய நிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் பரபரப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள குளிதிகை பகுதியில் விவசாய நிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆம்பூர் குளிதிகை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இன்று பிற்பகலில் திடீரென ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹெலிகாப்டரை காண அங்குள்ளவர்கள் குவிந்தனர்.

பலர் ஹெலிகாப்டர் அருகே செல்பி எடுத்துக்கொண்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாகவும், சரிசெய்த பின்னர் புறப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #TamilNews

SCROLL FOR NEXT