புதுடெல்லி:
பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய ராணுவ தினத்தில் ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டை பாதுகாப்பதுடன், இயற்கை பேரிடர் மற்றும் விபத்துக்களின் போதும் மனித நேயத்துடன் போராடுவதால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நமது ராணுவத்தின் மீது நம்பிக்கையும், பெருமையும் கொண்டுள்ளான். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரர்களையும் வணங்குகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி சங்கராந்தி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். #Armyday #tamilnews