செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படை ரோந்து வாகனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்- 9 வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று மாலை பாதுகாப்பு படையின் ரோந்து வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 வீரர்கள் காயம் அடைந்தனர்.

மாலை மலர்

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட அரிஹால்-லஸ்ஸிபோரா சாலை வழியாக பாதுகாப்பு படையினர் இன்று மாலை வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

ஈட்கா அரிஹால் என்ற இடத்தின் வழியாக வந்தபோது பாதுகாப்பு படை வாகனத்தின் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் காயம் அடைந்தனர். 

இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு கூடுதலாக வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் சென்ற வாகன வரிசையை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தூரத்தில் இன்றைய தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.