செய்திகள்

உ.பி.யில் ஆயுத கடத்தல்காரர் கைது - 21 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆயுத கடத்தல்காரரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 21 நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கைசியாபாத் பகுதியில் ஒருவர் ஆயுத கடத்தல் தொழில் செய்துவருவதாகவும், அவர் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கிவைத்துள்ளதாகவும் கிடைத்த தகவலையடுத்து அவர் வீட்டை சுற்றிவளைத்த போலீசார், அங்கு சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் போது அவர் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 21 வெவ்வேறு ரக நாட்டுத் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட நபர் ஷம்லி மாவட்டத்தை சேர்ந்த கவுசர். அவர் நொய்டா, விஜய் நகர் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் சட்டவிரோத கும்பல்களுக்கு ஆயுதங்கள் விற்று வந்ததாகவும் போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT