பெண் பிணம் 
செய்திகள்

அரியூர் அருகே சாலையோரம் பெண் பிணம் வீச்சு

அரியூர் அருகே சாலையோரம் வீசப்பட்ட பெண் பிணம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் அடுத்த அரியூரில் இருந்து அப்துல்லாபுரம் செல்லும் சாலையோரம் வடக்கு மேடு கிராமத்தின் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார்.

இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அரியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இறந்த பெண் பச்சை மற்றும் நீலம் கலந்த புடவை அணிந்திருந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

அவரது உடலில் ரத்த காயங்கள் எதுவும் இல்லை. போலீசார் பெண்ணின் பிணத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணை  மர்ம நபர்கள் கொலை செய்து சாலையோரம் வீசி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இறந்த பெண் யார் என்பது கண்டுபிடித்தால் உண்மை நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

அந்த பகுதியில் பெண் யாராவது மாயமாகி உள்ளார்களா வேலூர் மற்றும் அரியூர் பகுதியில் உள்ள லாட்ஜிகளில் தங்கியிருந்த பெண்கள் யாராவது மாயமானார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.