கவர்னர் ஆரிப் முகமது கான் பதவியேற்பு விழா 
செய்திகள்

கேரளாவின் கவர்னராக பதவி ஏற்றார் ஆரிப் முகமது கான்

கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக ஆரிப் முகமது கான் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டார்.

இந்நிலயில், திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ் பவனில் இன்று நடைபெற்ற விழாவில் கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக ஆரிப் முகமது கான் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.