தொடக்க ஆட்டத்தில் முன்னணி அணிகள் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் தோல்வியில் இருந்து தப்பினால் போதும் என்ற நிலைமைக்கு சில அணிகள் தள்ளப்பட்டது. ஜெர்மனி தோல்வியை எதிர்கொண்டது.
கடந்த 15-ந்தேதி பலம்வாய்ந்த ஸ்பெயின் - போர்ச்சுக்கல் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்தது. 16-ந்தேதி மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. மெஸ்சி தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறவிட்டார். இதனால் டிராவை சந்தித்தது அர்ஜென்டினா.
கோஸ்டா ரிகாவை 1-0 என செர்பியா வீழ்த்தியது. நடப்பு சாம்பியனான ஜெர்மனிக்கு மெக்சிகோ அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. மெக்சிகோ 1-0 என ஜெர்மனி வீழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.