கைது 
செய்திகள்

ஆற்காடு அருகே ஆட்டோ திருடிய வாலிபர் கைது

ஆற்காடு அருகே ஆட்டோ திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஆற்காடு:

ஆற்காடு அருகே தாயனூர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 39), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு வீட்டின் எதிரே ஆட்டோவை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இது குறித்து மணிவண்ணன் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆட்டோவை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் ஆட்டோ ஓட்டி வந்தது மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த காதர்பாட்ஷா (24) என்பதும், மணிவண்ணனின் ஆட்டோவை திருடியதும் தெரியவந்தது. மேலும் அந்த ஆட்டோவை விற்பனை செய்வதற்காக சென்னைக்கு எடுத்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காதர்பாட்ஷாவை போலீசார் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.