செய்திகள்

பீகார் பாராளுமன்ற இடைத்தேர்தலில் 12 மணிவரை 31.25 சதவீதம் வாக்குகள் பதிவு

பீகாரில் ஆராரியா தொகுதியில் இன்று நடைபெறும் பாராளுமன்ற இடைத்தேர்தலில் பகல் 12 மணி நிலவரப்படி 31.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. #Biharbyelection

பாட்னா:

பீகாரில் ஆராரியா மக்களவை தொகுதி மற்றும் ஜகானாபாத் மற்றும் பபுவா ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கூட்டணி மற்றும் கூட்டணி எதிர்க்கட்சிகளான ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று தொகுதி இடைத்தேர்தலிலும் வாக்களிக்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பகல் 12 மணி நிலவரப்படி ஆராரியா பாராளுமன்ற தொகுதியில் 31.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

சட்டமன்ற தொகுதிகளான ஜகனாபாத்தில் 28.6 சதவீதமும், பபுவாவில் 24.5 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த மூன்று தொகுதி இடைத்தேர்தல்களில் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 14-ந்தேதி எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும்.#Biharbyelection #tamilnews

SCROLL FOR NEXT