செய்திகள்

அரக்கோணம் அருகே ஆர்.கே.நகர் பிரசாரத்துக்கு சென்ற தி.மு.க. பிரமுகர் ரெயிலில் மரணம்

அரக்கோணம் அருகே ஆர்.கே. நகர் பிரசாரத்துக்கு ரெயிலில் சென்ற கரூர் தி.மு.க. பிரமுகர் திடீரென இறந்தார்.

அரக்கோணம்:

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் முருகேசன் (வயது55) ஆர்.கே. நகரில் பிரசாரம் செய்ய முடிவு செய்தார்.

நேற்று இரவு சென்னை செல்லும் பழனி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்தார். ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடியை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு முருகேசன் இறந்தார்.

ரெயில் அரக்கோணம் வந்ததும் ரெயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலுக்கு வேலூர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க. பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT