புதுடெல்லி:
அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் 125 சிசி கொண்ட ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த பியாஜியோ விநியோகஸ்தர் மூலம் இத்தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அப்ரிலியா SR125 மாடல் ஸ்கூட்டர் 12-இன்ச் அலாய் வீல் மற்றும் 125 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய SR150 மாடலில் 14-இன்ச் வீல் வழங்கப்பட்டிருந்தது. இதனால் புசிய ஸ்கூட்டரின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் விலை குறைந்த மாடல்களின் விற்பனை அதிகமாக இருக்கும். அப்ரிலியா SR150 விலை இந்தியாவில் தற்சமயம் ரூ.69,248 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறிய இன்ஜின் கொண்ட மாடல் ரூ.7000 முதல் ரூ.8000 வரை குறைக்கப்படலாம் என்பதால் சிறிய மாடலின் விலை ரூ.60,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்ரிலியா SR125 மாடலில் 3 வால்வ் கொண்டு நான்கு-ஸ்டிரோக் யுனிட் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 9.4 bhp மற்றும் 8.2 Nm செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க், மோனோஷாக், ரியர் ஷாக் அப்சார்பர்களை கொண்டுள்ளது. இந்தியாவில் புதிய ஸ்கூட்டர் பியாஜியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.