செய்திகள்

அட்டகாசமான புதிய நிறத்தில் அப்ரிலியா SR 150: விரைவில் வெளியாகும் என தகவல்

இத்தாலிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அப்ரிலியா SR 150 மாடல் ஸ்கூட்டரின் புதிய நிறம் கொண்ட மாடல் பூனேவில் உள்ள விற்பனையாளரிடம் காணப்பட்டுள்ளது.

மாலை மலர்

இத்தாலியை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அப்ரிலியா தனது பட்ஜெட் விலை ஸ்கூட்டரான SR 150 மாடலை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத வாக்கில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் விற்பனையாகும் சக்திவாய்ந்த ஸ்கூட்டராக இருக்கிறது.

பின் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அப்ரிலியா ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரேஸ் எடிஷன் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மெக்கானிக்கல் மற்றும் காஸ்மெடிக் மாற்றங்களுடன் வெளியிடப்பட்ட இந்த மாடல் மீண்டும் ஒரு அப்டேட் பெற இருக்கிறது.

அந்த வகையில் அப்ரிலியா SR 150 மாடல் நான்கு புதிய நிறங்களில் வெளியிடப்பட இருக்கிறது. சிக்வீல்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி புதிய நிறம் கொண்டிருக்கும் அப்ரிலியா SR 150 பூனேவில் உள்ள விற்பனையாளரிடம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புதிய அப்ரிலியா மெட்டாலிக் கிரீன், மெட்டாலிக் சில்வர், மெட்டாலிக் லைட் புளூ மற்றும் மெட்டாலிக் டார்க் புளூ நிறங்களில் வெளியாகும் என்றும் புதிய மாடலின் கிராஃபி்க்ஸ் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என கூறப்படுகிறது.

தற்சமயம் விற்பனையாகும் அப்ரிலியா SR 150 மேட் பிளாக் மற்றும் கிளாசி வைட் என இரண்டு நிறங்களை கொண்டுள்ளது. இதில் ரெட் டீகல் மற்றும் டூயல்-டோன் சீட் வழங்கப்பட்டது. அப்ரிலியா SR 150 ரேஸ் எடிஷன் மேஸ் கிரே மற்றும் ரேஸ் லிவெரி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சக்திவாய்ந்த ஸ்கூட்டரான அப்ரிலியா SR 150 மேலும் புதிய நிறங்களில் கிடைக்கும் போது விற்பனை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நிறங்கள் மட்டுமின்றி மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது.