செய்திகள்

டிப்ளமோ முடித்தவர்கள் பகுதி நேர பொறியியல் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

டிப்ளமோ முடித்து பணியாற்றி வருபவர்கள் பகுதி நேரமாக பொறியியல் படிக்க விண்ணப்பிக்கலாம் என தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை:

டிப்ளமோ முடித்து பணியாற்றி வருபவர்கள் தமிழகத்தில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 3 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேரமாக பொறியியல் படிக்க விண்ணப்பிக்கலாம் என தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் 5-4-2018 முதல் 10-5-2018 வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த பின்னர் அதனை உரிய பிரதி எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக்கட்டணத்துடன் கோவை தொழில்நுட்ப கல்லூரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் 300 செலுத்த வேண்டும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNews

SCROLL FOR NEXT