செய்திகள்

சபரிமலையில் பிரசாதங்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாத வகையில் தயாரிக்கப்படும் - தேவஸ்தான தலைவர்

சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அப்பம், அரவணை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாத வகையில் தயாரிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். #sabarimala

திருவனந்தபுரம்:

திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அப்பம், அரவணை தயாரிப்பதற்கான பணிகள் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அடுத்த சீசன் முதல் அவர்கள் தயாரிக்கும் மெதுவான அப்பம், சுவை கூட்டப்பட்ட அரவணை ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்படும்.

முன்னதாக அதற்கான பயிற்சி மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் சார்பில் ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் அளிக்கப்பட உள்ளது. மேலும் அப்பம் மற்றும் அரவணை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாத வகையில் தயாரிக்கப்படும்.

தயாரிப்பு செலவு கூடும் என்ற காரணத்தால், பிரசாதங்களின் விலையினை உயர்த்தும் எண்ணம் தேவஸ்தானத்திற்கு தற்போது இல்லை. முற்றிலும் எந்திரங்களின் மூலம் சுத்தமாக இவை தயாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #sabarimala

SCROLL FOR NEXT