செய்திகள்

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ உண்மைதான்: அப்பல்லோ ஆஸ்பத்திரி விளக்கம்

டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ உண்மை தான் என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி விளக்கம் அளித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

ஜெயலலிதா வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரி விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ உண்மை தான்.

இந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் இந்த வீடி யோவை எடுத்து இருக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.