செய்திகள்

விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள்- மனோஜ்பாண்டியன் ஆஜர்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் மற்றும் அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் ஆஜரானார்கள். #JayadeathProbe

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் பலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் வெங்கட் ராமன், பத்மாவதி, புவனேஸ்வரி சங்கர் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் விளக்கங்களை அளித்தனர்.