சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கலைஅரசன் (29). மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு நாளில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களை இலவசமாக அழைத்து செல்வது வழக்கம்.
இந்த வருடமும் அப்துல்கலாம் நினைவு நாளில் இன்று காலை முதல் மாலை வரை இலவச சேவையை மேற்கொண்டார்.
30-க்கும் மேற்பட்ட பயணிகளை அவர் தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்து சென்றார். இதில் அவருக்கு மன நிம்மதி ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
நான் வாடகைக்குதான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். நாள் ஒன்றுக்கு ரூ.200 ஆட்டோவுக்கு வாடகை கொடுக்க வேண்டும். எனது ஆட்டோ உரிமையாளர் அதனை ஒவ்வொரு ஆண்டும் வேண்டாம் என்று கூறி விடுவார்.
இன்று இலவசமாக பொது மக்களை ஏற்றி செல்வதற்காக ரூ.500-க்கு பெட்ரோலும், ரூ.200-க்கு ஆயிலும் ஆட்டோவில் போட்டு நிரப்பி வைத்து இருந்தேன்.