திருமலை:
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அவரது பேரன் தேவான்ஷ் பிறந்த நாளையொட்டி திருப்பதி கோவிலுக்கு குடும்பத்தினருடன் நேற்று இரவு வந்தார்.
அவரை சுகுணா எம்.எல்.ஏ. மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.
இரவு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று அதிகாலை குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதனையடுத்து அன்னதானத்துக்கு ஒரு நாளைய செலவு ரூ.26 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். இதனை தேவஸ்தான செயல்அலுவலர் அனில்குமார் சிங்கால் பெற்றுக்கொண்டார்.
சந்திரபாபு நாயுடு வருகையொட்டி திருமலையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. #Tamilnews