செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்- அன்வர் ராஜா பேட்டி

அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம் என அன்வர் ராஜா எம்.பி. கூறினார். #anwarrajamp #cauveryissue #parliament

மாலை மலர்

ராமநாதபுரம்:

அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம் என அன்வர் ராஜா எம்.பி. கூறினார்.

ராமநாதபுரத்தில் அன்வர் ராஜா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் 37 பேர் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. எம்.பி.க் கள் ராஜினாமா என்பது அ.தி.மு.க., கொள்கை முடிவு. நாங்கள் எதுவும் செய்ய இயலாது. நாங்கள் ராஜினாமா செய்து விட்டால் காவிரி மேலாண் வாரியம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எவருமில்லை.

இந்தியாவில் சிந்து, கங்கை நதி நீர் சீனா, வங்காள தேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு எவ்வித சர்ச்சையுமின்றி பகிர்ந்து அளிக்கப்படுகிறது. காவிரி நீர் விவகாரம் என்பது அரசியலில் பிரதானமாக உள்ளது. கர்நாடக அரசியலில் காங்கிரஸ், பா.ஜ.க. சம போராட்டத்தில் உள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் கர்நாடகா அரசு முரண்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டு நீதிமன்ற வழக்கு தொடர்ந்து தான் நிறைவேற்ற முடிந்தது.

ரூ.86 லட்சம் கோடி மத்திய பட்ஜெட் எவ்வித விவாதமும் இன்றி முடிந்துள்ளது. அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அ.தி.மு.க.,வின் உயிர் துடிப்பான போராட்டம் தொய்வின்றி தொடரும். அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #anwarrajamp #cauveryissue #parliament