செய்திகள்

புனே திரைப்பட கல்லூரி தலைவராக அனுபம் கெர் நியமனம்

மராட்டியம் மாநிலம் புனேவில் இருக்கும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக்கல்லூரியின் தலைவராக திரைப்பட இயக்குநர் அனுபம் கெர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

மராட்டியம் மாநிலம் புனேவில் இருக்கும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக்கல்லூரியின் தலைவராக திரைப்பட இயக்குநர் அனுபம் கெர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மராட்டியம் மாநிலம் புனேவில் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக்கல்லூரி உள்ளது. மிகவும் புகழ்பெற்ற பல திரைத்துறை நட்சத்திரங்கள் இந்த கல்லூரியில் படித்துள்ளனர். இக்கல்லூரியின் தலைவராக கஜேந்திர சவுகான் கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட போது பல்வேறு தரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், திரைப்பட இயக்குநர் அனுபம் கெர் அந்த பதவிக்கு இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அனுபம் கெர் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.