சென்னையில் நடந்த போராட்டம் 
செய்திகள்

சென்னையில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்- அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.

சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. அவ்வகையில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் இன்று போராட்டம் நடந்தது.

இதில், திருமாவளவன், தமிமுன் அன்சாரி, வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதற்கிடையே குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக நாட்டு மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். மாணவர்களை தவறாக வழி நடத்துபவர்கள் சரியான தலைவர்கள் அல்ல என்றும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT