கைது 
செய்திகள்

கோட்டையை முற்றுகையிட முயற்சி- கம்யூனிஸ்டு கட்சியினர் 500 பேர் கைது

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோட்டையை முற்றுகையிட முயன்ற கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

ராயபுரம்:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று கோட்டையை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.

இதற்காக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்டு தொழிற்சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் தலைமையில் 500-க்கும் அதிகமானோர் இன்று பாரிமுனையில் கூடினார்கள்.

அங்கிருந்து கோட்டையை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.