சென்னை:
தி.நகரில் உள்ள எலைட் சரவணா ஸ்டோர்ஸ் நகை கடையின் உரிமையாளராக இருப்பவர் சிவஅருள்துரை.
இவரது கடையில் கடந்த மாதம் 13-ந் தேதி புகுந்த ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.15 லட்சம் பணத்தை பறித்தது.
அருள்துரையின் கடையில் நகை வாங்கிய கும்பல் அதில் ஒரு பொடியை தடவி போலி நகையை விற்பனை செய்வதாக கூறி மிரட்டியது தெரியவந்தது.
இது தொடர்பாக மாம்பலம் போலீசில் அருள்துரை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 10 பேரை உடனடியாக கைது செய்தனர். இவர்களில் வக்கீல்களும் இருந்தனர்.
இந்த நிலையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கொளத்துரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் இன்னும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.