வழக்கு பதிவு 
செய்திகள்

அன்னூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு

அன்னூர் அருகே உள்ள கரியனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மாலை மலர்

அன்னூர்:

அன்னூர் அருகே உள்ள கரியனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் ரகசிய கிடைத்தது. இதையடுத்து அன்னூர் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5,600, சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 4 சேவல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.