சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் முறைப்படி , குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி அடையாதோர்களுக்கான தேர்வு, அடுத்த செமஸ்டரில் தேர்வினை எழுதலாம் என இருந்தது. 2017-ம் ஆண்டில் இருந்து அம்முறை மாற்றப்பட்டு , கிரெடிட் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.
இதனையடுத்து இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன் திரண்ட மாணவ, மாணவிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கிரெடிட் முறையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என்றும் பதிவாளர் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.
‘அரியர் தேர்வு விதிகளில் செய்த மாற்றத்தை மாணவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. பல்கலைக்கழக இணைய தளத்தில் இதனை தெரிந்துகொள்ளலாம். தனி குழு அமைத்து மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார். #AnnaUniversity #StudentsProtest