கொலையுண்ட மனைவி அம்முவுடன் கணவர் சீனிவாசன் 
செய்திகள்

அண்ணாநகரில் கழுத்தை அறுத்து மனைவியை கொன்ற கணவர்

சென்னை அண்ணாநகரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

போரூர்:

அண்ணாநகரில் கிழக்கு நியூகாலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (34). கூலி தொழிலாளி.

இவருக்கு அம்மு (25) என்ற மனைவியும் மோகன கிருஷ்ணன் (8) என்ற மகனும் உள்ளனர். மகன் அயனாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.

சீனிவாசன் தினமும் குடித்துவிட்டு வருவார். அதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று இரவும் கணவன், மனைவி இடையே தகராறு நடந்தது.

இதையடுத்து சீனிவாசன் அவசர போலீஸ் போன் நம்பர் 100-க்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தனது வீட்டு விலாசத்தை போலீசாரிடம் தெரிவித்து தன்னிடம் மனைவி தகராறு செய்வதாக தெரிவித்துள்ளார்.

உடனே டி.பி.சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் போலீசாருடன் அங்கு விரைந்துள்ளார். வீட்டுக்குள் சென்ற அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு சீனிவாசனின் மனைவி அம்மு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரை சீனிவாசன் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. இதையடுத்து டி.பி.சத்திரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தொழிலாளி சீனிவாசனை போலீசார் தேடி வருகிறார்கள்.