புனே:
காந்தியவாதியும், ஊழல் எதிர்ப்பாளருமான அன்னா ஹசாரேக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் மராட்டிய மாநிலம் புனே, அருகே உள்ள வேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அன்னா ஹசாரேவின் நெருங்கிய உதவியாளர் கூறியதாவது:-
சளி காரணமாக, அவருக்கு நெஞ்சு பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு இருமல் மற்றும் உடல் பலவீனம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை, அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.