மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 49-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இருந்து தி.மு.க.வினர் அமைதிப் பேரணியாக புறப்பட்டு அண்ணா சதுக்கம் சென்றடைந்தனர்.
அங்கு அண்ணா நினைவிடத்தில் பேராசிரியர் அன்பழகன், செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பேரணி மற்றும் அஞ்சலி நிகழ்ச்சியில், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, ஜெகத்ரட்சகன், பொன்முடி, ஆ.ராசா, எ.வ.வேலு, வி.பி. துரைசாமி, டி.கே.எஸ். இளங்கோவன், தயாநிதி மாறன், சிங்கார ரத்தினசபாபதி, மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், மாதவரம் சுதர்சனம்,
எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், பல்லாவரம் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மோகன், தாயகம் கவி, பெரிய கருப்பன், பகுதி செயலாளர்கள் சேப்பாக்கம் எஸ்.மதன் மோகன், மகேஷ்குமார், கே.கே.நகர் தனசேகரன், காமராஜ், அன்புதுரை, பெருங்குடி ரவி, ஐ.சி.எப்.முரளி, குணா, சந்திரன், மருதுகணேஷ், பாலவாக்கம் விசுவநாதன், ராமலிங்கம், பரமசிவம், கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா,