புதுச்சேரி:
புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அண்ணாவின் 49-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில செயலாளர் பாஸ்கர் எம்.எல்.ஏ., மாநில துணைச் செயலாளர்கள் கணேசன், பன்னீர்செல்வி, நாகமணி, நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, பேரவை பொருளாளர் சேரன், தொகுதி செயலாளர்கள் கலியபெருமாள், கிருஷ்ணமூர்த்தி, நாராயணன், பால்ராஜ், கருணாநிதி, பொன்னுசாமி, ஜானிபாய், மணி, ரவி, ராஜ்பவன் சிவக்குமார், அன்பழக உடையார், பேரவை இணைச் செயலாளர் சித்தானந்தம், சிவாலயா இளங்கோ மற்றும் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தலைமையில் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில இணைச் செயலாளர்கள் திருநாவுக்கரசு, காசிநாதன், முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ், துணைச்செயலாளர்கள் பெரியசாமி, கோவிந்தம்மாள், முன்னாள் அமைச்சர்கள் காசிலிங்கம், வெங்கடசாமி, முன்னாள் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், முன்னாள் அரசு வக்கீல் ராமலிங்கம், மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி, வக்கீல் பிரிவு குணசேகரன், சிறுபான்மை பிரிவு அந்துவான் சூசை, மருத்துவ அணி நன்னன், பொதுக்குழு உறுப்பினர்கள் நந்தன், வெரோனிக்கா மற்றும் தொகுதி செயலாளர்கள், அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுவை மாநில வடக்கு தி.மு.க. சார்பில் செஞ்சி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் மவுன ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு, அவைத்தலைவர் பலராமன், துணை அமைப்பாளர்கள் ஏ.கே. குமார், பெல்லாரி கலியபெருமாள், பொருளாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் என்ற சரவணன், லோகையன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுவை தெற்கு மாநில தி.மு.க. சார்பில் இன்று அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நெல்லித்தோப்பு சிக்னல் அருகில் உள்ள வ. சுப்பையா சிலை முன்பு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்று கூடினர்.
மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு, மறைமலையடிகள் சாலை வழியாக அண்ணா சதுக்கம் அடைந்தனர். அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்தும், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாநில அவைத்தலைவர் சீத்தா. வேதநாயகம், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் சண். குமரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் வேலவன், வேலன், அருட்செல்வி, பாஸ்கர், டாக்டர் மாயக்கிருஷ்ணன், தொகுதி செயலாளர்கள் நடராஜன், சக்திவேல், சீத்தாராமன், லோகு, ரவிச்சந்திரன், பாண்டு. அரிகிருஷ்ணன், கலிய கார்த்திகேயன், சுந்தரமூர்த்தி (பொறுப்பு), உள்ளிட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
டி.டி.வி. தினகரன் அணி சார்பில் வக்கீல் வேல்முருகன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில துணைச்செயலாளர்கள் மூர்த்தி, பாண்டுரங்கன், தொகுதி செயலாளர்கள் செந்தில்முருகன், முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் வீரப்பன், இரிசப்பன், காலாப்பட்டு தமிழ்மாறன், உழவர்கரை நகர துணைச்செயலாளர் பிரகாஷ்ராய், மாநில மீனவர் அணி துணைச்செயலாளர் வரதராஜன், நாகராஜன், கணபதி, மணவெளி வார்டு செயலாளர் கண்ணன், ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ராஜாராம், அரிகிருஷ்ணன், வக்கீல் மஜித், கடுவனூர் கிருஷ்ணமூர்த்தி, வீராம்பட்டினம் அவைத்தலைவர் பன்னீர்செல்வம், ஏழுமலை, காலாப்பட்டு மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் தினகரன் அணி சார்பில் சுத்துகேணி பாஸ்கர் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர்கள் சேகர், தமிழ்செல்வன், ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஏம்பலம் சம்பத், மேலவை பிரதிநிதிகள் பாஸ்கர், நெல்லித்தோப்பு கணேஷ், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் இளங்கோவன், முருகன், குமரன், செந்தில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காக்காயந்தோப்பு அ.தி.மு.க. சார்பில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மாசிலா குப்புசாமி தலைமையில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதி அவைத்தலைவர் நடராஜன், முன்னாள் தொகுதி அவைத்தலைவர் குமரன், வார்டு தலைவர் சரவணன், நிர்வாகிகள் ஆறுமுகம், சகாயராஜ் (டெய்லர்), கதிர்வேல், காண்டியன், குணாளன், சாம்பசிவம், சுப்புராயன், வெங்கடசாமி, ஜானகிராமன், வெற்றி வேல், செயச்சந்திரன், வீரப்பன், வேல்முருகன், கோவிந்தன், கார்த்திகேயன், மெடிக்கல் பழனி, அருண்குமரன், குமரன், மகாலிங்கம், அமுதவல்லி, இளையராஜா, பிரகாஷ், அஞ்சான், பரமசிவம், முருகன், கலா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
தேங்காய்திட்டு புதுநகர், திலகர் நகர் கிளை தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தின நிகழ்ச்சி கிளைச்செயலாளர் பெருமாள் தலைமையில் நடந்தது. மாநில அவைத்தலைவர் (தெற்கு) சீத்தா. வேதநாயகம் அண்ணா உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். #tamilnews