செய்திகள்

ஒலிம்பிக் திட்டத்தில் அங்கிதா ரெய்னா

ஒலிம்பிக் பதக்க சிறப்பு பயிற்சிக்கான திட்டத்தில் இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார்.#AnkitaRaina

மாலை மலர்

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள இந்திய வீரர்-வீராங்கனைகள் அடையாளம் கண்டு மத்திய அரசு சிறப்பு பயிற்சி அளிக்க உதவி செய்து வருகிறது. ஒலிம்பிக் பதக்க சிறப்பு பயிற்சிக்கான திட்டத்தில் இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார்.

உலக ஒற்றையர் தரவரிசையில் 197-வது இடத்துக்கு முன்னேறியுள்ள அங்கிதா ரெய்னா, சானியா மிர்சா, நிருபமா வைத்யநாதனுக்கு பிறகு உலக தரவரிசையில் 200 இடங்களுக்குள் முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. #AnkitaRaina