செய்திகள்

விமானம் தாமதமானதால் ஆத்திரம் - சென்னையில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டவருக்கு சிகிச்சை

சென்னையிலிருந்து மும்பை செல்லும் விமானம் இன்று தாமதமானதால், ஆத்திரமடைந்த பயணி தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #manharmsself #flightdelay

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை மும்பை செல்வதற்கான விமானம் 3 மணி நேரம் தாமதமாக கிளம்பியது. இந்த விமானத்துக்காக காத்திருந்த பயணி ஒருவர், விமானத்தின் தாமதம் குறித்து விமான நிலைய பணியாளர்களிடம் கேட்டுள்ளார். இது அவர்களிடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆத்திரமடைந்த பயணி, தான் வைத்திருந்த பேனாவை எடுத்து தன்னைத் தானே தாக்கி காயப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அந்த பயணியை விமான நிலைய அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், பயணி மது அருந்தி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. #manharmsself #flightdelay

SCROLL FOR NEXT