சர்வதேச டென்னிஸ் தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே 11270 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7085 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 5685 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 5125 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஸ்பெயின் நாட்டின் நடால் 4375 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
ரயோனிக் (கனடா), மரின் சிலிக் (குரோஷியா), கெய் நிஷிகோரி (ஜப்பான்), டொமினிக் தீம் (ஆஸ்திரேலியா), டேவிட் கோஃபின் (பெல்ஜியம்) முறையே 6-வது இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்துள்ளனர்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் முதல் இடத்தில் உள்ளார். ஏஞ்சலிக் கெர்பர் 2-வது இடத்திலும், கரோலினா ப்ளிஸ்கோவா 3-வது இடத்திலும் உள்ளனர்.